• Dec 26 2024

"தங்கலான்" படத்தின் அமெரிக்க வெளியீடு குறித்து வெளியான அறிவிப்பு !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தற்போது வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் அனைத்தும் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு ரசிகர்களை எடுத்து சென்று பாதாளத்தில் தள்ளும் வகையில் திரையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவர காத்திருக்கிறது  சியான் விக்ரமின் "தங்கலான்" திரைப்படம்.

Vikram-starrer Thangalaan release date ...

தமிழ் ரசிகர்கர்களின் மொத்த எதிர்பார்ப்புக்கும் பதிலை சொல்ல வருகிற ஆகஸ்ட் 15 இல் உலகளவில் வெளியாகிறது பா.ரஞ்சித்தின் "தங்கலான்".படத்திற்கான இசையை ஜி.வி.பிரகாஷ்குமார் வழங்குவது படத்திற்கு பெரும் பலமாக இருக்கும்.

period film Tamil Movie ...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்,நடிகர், இசையமைப்பாளர்  இணைத்திருக்கும் இப் படத்தின் முக்கிய அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளியாகிக்கொண்டிருக்க அண்மையில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகி உள்ளது.


அதாவது "தங்கலான்" படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை  'டென்ட்கோட்டா' மற்றும் சிம்பா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் பெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.நாளுக்கு நாள் வெளியாகும் அப்டேட் மற்றும் அறிவிப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து செல்கின்றன.



Advertisement

Advertisement