• Dec 26 2024

வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத சங்கர்! சட்டென எஸ்.ஜே சூர்யா கூறிய பதில்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா திரையுலகில் மிக பிரபலமான முன்னனி இயக்குனர் தான் ஷங்கர். இவரின் திரை படைப்புகள் பல மிகவும் பிரமாண்டமானவை. தமிழ் திரைப்படங்கள் தாண்டி பல மொழிகளிலும் திரைப்படங்களை எடுத்து வெற்றி கொடி நாட்டி வருகிறார். 


ரசிகர்கள் இவரின் 2.0 படம் வரை எல்லா படங்களையும் கொண்டாடி தீர்த்துள்ளார்கள். அதன்பின், கமலுடன் அவர் கூட்டணி அமைத்து எடுத்த இந்தியன் 2 படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக ஷங்கர் இயக்கி வரும் படம் திரைப்படம் கேம்சேஞ்சர்.


இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுத, ராம்சரணுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஆகியோர் நடிப்பில், எஸ் தமன் இசையில் தெலுங்கு படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. 

d_i_a

ராம்சரணின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் சிங்கில் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து வைத்தன. இந்த நிலையில், சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குனர் ஷங்கர் அந்த நிகழ்வில் பங்கு பற்றவில்லை. 


இதனால் பலர் தரப்பில் இருந்தும் வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில் பேசிய எஸ்.ஜே சூர்யா, இந்த நிகழ்ச்சியில் ஏன் ஷங்கர் பங்கேற்கவில்லை என்று கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதில் பிஸியாகப் பணியாற்றி வருவதால்தான் இருவரும் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்தார். அதன் பின்னரே கொஞ்சம் விமர்சனங்கள் குறைந்தது. 


Advertisement

Advertisement