• Apr 16 2026

சிம்பிள் லுக்கில் செம ஸ்டைல்.. இணையத்தை சூடேற்றிய அனுபமாவின் கிளாமரான போஸ்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளார். எளிமை, இயல்பு மற்றும் அழகின் கலவையாக திகழும் அவரது புதிய லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் சினிமா உலகில் காலடி வைத்தார் அனுபமா பரமேஸ்வரன். இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூறப்படுகிறது. இயல்பான நடிப்பு மற்றும் சிரிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அனுபமா, முதல் படத்திலேயே கவனிக்கத்தக்க நடிகையாக மாறினார்.

மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். 2016ஆம் ஆண்டு வெளியான கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பாராட்டுகளை பெற்றது. மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றார்.


தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் அனுபமா பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். காதல், குடும்பம், உணர்ச்சி என அவருடைய நடிப்பு பலரின் பாராட்டைப் பெற்றது. 

திரைப்படங்களுக்குப் புறம்பாக சமூக வலைத்தளங்களிலும் அனுபமா செயல்பட்டு வருகின்றார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

இந்நிலையில், தற்போது அனுபமா பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement