• Dec 27 2024

பாடகி தீயுடன் குத்தாட்டம் போட்ட AR ரகுமான்..! வெளியானது காதலிக்க நேரமில்லை பாடல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை படத்தின் மூலம் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்தியவர் தான் கிருத்திகா உதயநிதி. இவர் கடந்த ஆண்டில் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் வெளியிட்டு இருந்தார். இதுவும் அவருக்கு சிறப்பான வரவேற்பை  பெற்றுக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் நித்தியா மேனன் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

d_i_a

ஜெயம் ரவியின் அடுத்த அடுத்த திரைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது.. இருந்தபோதிலும் அவருடைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளியான சைரன், பிரதர் ஆகிய படங்கள் சொதப்பலாகவே காணப்பட்டது.


இந்த நிலையில், ஜெயம்ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் அதில் பாடகி தீயுடன் இணைந்து ஆட்டமும் போட்டுள்ளார். இந்தப் பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார்.

இந்தப் பாடலில் ஜெயம் ரவியும் நித்தியாமேனனும் மாஸாக காணப்படுகின்றார்கள். ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் காதலை மையமாகக் கொண்ட சிறப்பான பாடல்களை ஏ. ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். தற்போது அதே கொண்டாட்டத்துடன் காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement