• May 28 2026

ஏ.ஆர். ரகுமான் காட்டிய வழி.. ஆஸ்கர் நிச்சயம்.! இசையமைப்பாளர் தமன் அதிரடிக் கருத்து.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய இசைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் எஸ். தமன், சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. உலகளாவிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற தனது கனவை வெளிப்படையாக பகிர்ந்துள்ள அவர், ஆஸ்கர் விருதை நோக்கிய தனது பயணத்தைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.


“ஏ.ஆர். ரகுமான் அவர்கள் ஆஸ்கர் வென்றார்; நாமும் ஆஸ்கரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவர் உருவாக்கி விட்டார். அந்த பாதையை அவர் எங்களுக்கு காட்டி வைத்துள்ளார். நாம் அந்த வழியில் பயணித்து நிச்சயம் ஆஸ்கர் வாங்கி வருவோம்,” என தமன் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குநர் போன்றவர்கள் வந்து தான் ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எம். எம். கீரவாணி அவர்கள் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பணியாற்றி உலக அளவில் சாதித்தார். அதுபோல நாமும் முயற்சி செய்யலாம்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல், “திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றி ஒருநாள் ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்பது என் கனவு. அதற்காக தொடர்ந்து உழைப்போம்,” என்று தமன் தனது எதிர்கால இலக்கை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கருத்துக்கள் ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

Advertisement

Advertisement