• May 22 2026

விஜய்யோடு இத்தனை அமைச்சர்கள் பதவியேற்கின்றனரா? இறுதியில் ஆளுநர் வைத்த செக்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் பல நாட்களாக நீடித்த பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார். 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல்காந்தியும் சென்னை புறப்பட்டார். 

விஜயுடன் சேர்த்து முதற்கட்டமாக 10 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், சென்னை நகரின் 20 முக்கிய இடங்களில் எல்.இ.டி மின்னணு திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பின் மையமாக இருந்த விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கும் மீண்டும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் இருந்து அவரது இல்லம் வரை கான்வாய் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


அதேவேளை, ஆளுநர் அர்லேக்கர் வழங்கிய உத்தரவின் படி, வரும் 13ஆம் தேதிக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் விஜய் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரும் மகிழ்ச்சி தெரிவித்து, “தமிழக மக்களுக்கு தேவையான அனைத்தையும் விஜய் செய்ய வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement