தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார். இதற்காக அவர் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
மேலும், பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டதோடு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை. நேற்று தான் இதன் வேட்பு மனு தாக்கல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆறாம் தேதி மனு தாக்கல் முறை முடிவடைகிறது. எனவே, மனு தாக்கலுக்கான இரு நாட்களே இருப்பதால், பலர் மும்முரமாக மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது, அவர் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குற்ற வழக்குகளின் விவரம் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், திருச்சியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் இரண்டு குற்ற வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. பெரம்பூர் தொகுதி வேட்பு மனுவில் குற்ற வழக்குகள் இல்லை எனவும், திருச்சியில் வழக்கு இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய புதிய சர்ச்சைக்கு காரணமாக உள்ளது.
Listen News!