விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தன்னுடைய காமெடியை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர்களுள் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
சமீபத்தில் இவர்மீது திருநங்கை வைஷு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு மீது போலீஸ் புகார் கொடுத்தார். அதற்குப் பின் இந்த பிரச்சனை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.
நாஞ்சில் விஜயன் தன்னுடைய சகோதரி மூலம் அறிமுகமான மரியம் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்.

அதே நேரத்தில், நாஞ்சில் விஜயன் தன்னுடைய கலைத்திறமையை வெளிப்படுத்த பல கெட்டப்புகளில் அசத்துவார். இவர் பல பெண்களைப் போல மேக்கப் செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
இந்த நிலையில், நாஞ்சில் விஜயன் தாய்க்கிழவி கெட்டப் போட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “லோ பட்ஜெட் தாய்க்கிழவி” என டைட்டில் வைத்துள்ளார்.
மேலும் அதில் ராதிகா போலவே அந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை வீடியோவில் பதிவு செய்துள்ளார். தற்போது நாஞ்சில் விஜயனின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!