• Dec 24 2024

நீங்க கொஞ்சம் வீட்டுக்கு வாறீங்களா? கோபிக்கு ராதிகா வச்ச செக்..! எழில் எடுத்த முடிவு

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழிலையும் அமிர்தாவையும் ஈஸ்வரி வீட்டுக்கு அழைக்கின்றார். அதற்குக் காரணம் மீண்டும் எல்லாரும் ஒன்றாக இருக்கலாம். அவர்கள் இருவரையும் மீண்டும் வீட்டுக்கு வருமாறு சொல்லுகின்றார். மேலும் இந்த ஐடியா கோபி கொடுத்ததாகவும் சொல்லுகின்றார்.

இதை கேட்டு எழிலும் பாக்கியாவும் அதிர்ச்சி அடைகின்றார்கள். அத்துடன் எழில் எந்த பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியே போனார் என்று உங்களுக்கு தெரியும் தானே.. அவன் படமெடுத்து சாதித்த பிறகு தான் வருவான் என்று பாக்கியா சொல்லுகின்றார். எழிலும் அதே முடிவை தான் சொல்லி செல்லுகிறார். 

ஆனாலும் கோபி வீட்டில் இருக்கிற எல்லாரும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கணும், அதுதான் சந்தோஷம் என்று வீட்டைப் பற்றி பெருமையாக பேசுகின்றார். பாக்யா இதைக்கேட்டு சிரித்ததோடு மட்டுமில்லாமல் இதை நீங்க சொல்றது தான் வேடிக்கையாக இருக்கிறது என்று கோபிக்கு பதிலடி கொடுக்கின்றார்.


அதன் பின்பு ராதிகாவுக்கு கோபி கால் பண்ணி எப்படி இருக்கிறா? என்றும் மையூவை பற்றியும் விசாரிக்கின்றார். மேலும் தனக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையும் சொல்லுகின்றார். இதனால் ராதிகா கோபியை பார்ப்பதற்காக வீட்டுக்கு வருகின்றார்.

அங்கு வந்த ராதிகா கோபியை நலம் விசாரித்து விட்டு நாளைக்கு வீட்டுக்கு வாரீங்களா என்று கேட்கிறார். அதற்கு ஏன் என்று கோபி கேட்க, நாளைக்கு மையூவுக்கு பர்த்டே அதனால வீட்டுக்கு வாங்க என்று சொல்லுகின்றார். 

Advertisement

Advertisement