• Dec 26 2024

நீங்க முதல் ஒழுங்கா? உங்க பர்சனல் பத்தி நான் சொல்லட்டா? விசித்ராவை கிழித்து தொங்கவிட்ட வனிதா!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என தெரிந்துவிடும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மக்களின் எதிர்பார்ப்போடு தொடங்கி தற்போது 90 நாட்களைக்  கடந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான வனிதா விஜயகுமார், தற்போது பிக் பாஸ் சீசன் 7 வீட்டிலுள்ள விசித்திரா, தினேஷின் பர்சனல் வாழ்க்கையை பற்றி பேசியதை கண்டித்து வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


அதாவது, பிக் பாஸுக்குள் சமைத்துக் கொண்டிருந்த ரவீனா, பாத்திரத்தை கழுவுவதற்காக விசித்திராவை கூப்பிட, அதற்கு விசித்திரா கோபமாகி உங்களால இந்த வேலை கூட செய்ய முடியாதா என்று கேட்டபடியே இந்த பொண்ணுங்க எல்லாம் எப்படித்தான் கல்யாணம் பண்ணி நாளைக்கு குடும்பம் நடத்தப் போகுதுன்னு தெரியல என்று சலித்துக் கொண்டார்.


மேலும், தினேஷ் தான் வேணும் என்றே இவ்வாறு ரவீனாவிடம் சொல்லி இருப்பார் என தினேஷை திட்டிக் கொண்டிருந்தார். அதன்படி, இவருடைய மூஞ்ச பாத்தாலே பிடிக்கல, இவரோட எல்லாம் எப்படித்தான் வாழ முடியும்? மூன்று மாசமே இவங்களோட என்னால குப்பை கொட்ட முடியல... அம்மா தாயே நீ திருப்பி இவர்கூட வாழ்ந்திடாதே என்று கேமராவை பார்த்து ரச்சிதாவிற்கு செய்தியும் கொடுத்திருந்தார். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் விசித்ரா இவ்வாறு பேசியதற்கு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் வனிதா. அதன்படி மேலும் அவர் கூறுகையில்,


தினேஷின் பர்சனல் வாழ்க்கையை குறித்து விசித்திரா எப்படி பேசலாம்? இது ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் வருகிறோம்.அதனால இங்க வேலை பார்க்க வேண்டியது தானே? செய்ய மாட்டேன் என எவ்வாறு அடம் பிடிக்கலாம்?

தற்போது, பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் விசித்திரவிற்கு தான் அதிக சம்பளம். ஆனால் அவர் நான் வேலை செய்ய மாட்டேன் என்று அடம்பிடிப்பது எந்த வகையில் நியாயம்? அதுவும் தினேஷ் முகம் சரியில்லை, அவர் அழகாகவில்லை, அவரோடெல்லாம் வாழ முடியாது என்று இவர் எதுக்கு பீல் பண்ணுறா?

அதுவும் ஏற்கனவே தினேஷ், ரச்சிதாவ பிரிந்து இருந்தாலும், அவங்க கூட  சேரனும்னு பலமுறை சொல்லிட்டு இருக்காங்க. ஆனால் விசித்திரா தினேஷ் மீது இருக்குற கோவத்துல அவங்க வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்துறாங்க. என மொத்தமாக அவர் மீதுள்ள தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளார் வனிதா.

 


Advertisement

Advertisement