• Dec 26 2024

அர்ஜூன் - தம்பி ராமையா வீட்டில் நடந்த விசேஷம்! குடும்பத்துடன் சாமி தரிசனம்..

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் அர்ஜுன். நடிப்பில் வெளியான செங்கோட்டை, ஜென்டில்மேன், கர்ணன், ஜெயஹிந்த், சேவகன், முதல்வன், ஏழுமலை, கிரி போன்ற ஹிட் படங்கள் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பல ஹீரோக்கள் உச்சத்தில் இருந்த போதே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்பட்டது.

ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன், ஒரு கட்டத்தில் அதனை நிறுத்தி தற்போது நெகட்டிவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரம் என பல கேரக்டரில் நடித்து வருகின்றார். அர்ஜுன் நடிப்பில் இறுதியாக லியோ படம் வெளியானது. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார்.

அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு பிறகு தனது சம்மந்தி தம்பி ராமையாவின் குலதெய்வ கோயிலுக்கு சென்று அர்ஜுன் வழிபட்டார். அதில் திருமயம் அருகே உள்ள திருவட்டை அழகர்சாமி கோயிலில் அர்ஜுன் - தம்பிராமையாவின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள். இதன் போது அர்ஜுன் தம்பி ராமையா இருவருக்கும் பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement