• Dec 25 2024

அர்னவின் முகத்திரையை சில்லுசில்லாக உடைத்த அருண்! தர்ஷாவால் வெடித்த கலவரம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசனில்  கால் பதித்து உள்ளது. முதல் முறையாக விஜய் சேதுபதி கோஸ்ட் ஆக களம் இறங்கி உள்ளார். இவர் உலகநாயகனின் இடத்தை நிரப்புவாரா என்ற கேள்விக்கு முதல் வாரத்திலேயே சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, ஜெஃப்ரி, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

எனினும் பிக் பாஸ் முதலாவது வாரத்திலேயே தயாரிப்பாளர் ரவீந்தர் எலிமினேட் ஆகி வெளியே சென்று இருந்தார். தற்போது ஏனையவர்கள் தனது ஆட்டத்தை ஆடி வருகின்றார்கள்.  இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துள்ள போட்டியாளர்கள் அதிகமாக விஜய் டிவி பிரபலங்கள் தான் எனவும், இம்முறை சுவாரஸ்யம் இல்லாமல் செல்வதாகவும் ரசிகர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.


இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான மூன்றாவது ப்ரோமோவில், உன்னை ரொம்ப குழப்ப பார்ப்பார்கள், கவனமாக இரு என்று அர்னவ் சொன்னதாக தர்ஷா சொல்கிறார். உடனே கோபப்பட்டு அருண், எங்களுக்குள்ளே இருந்து உங்களை நல்லவராகவும் எங்களை எங்களுக்குள்ளே காண்பிக்கிறாயா? என்று இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. பின் தர்ஷாவால் ஆண்கள் அணிக்குள் கலவரம் வெடிக்கிறது.

இவ்வாறு இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரையில் ஆண்கள் பெண்கள் அணிக்குள் மாறி மாறி சண்டை சச்சரவுகள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement