• Dec 25 2024

பிக் பாஸ் சீசன் 8 தொடர்ந்து நடக்குமா? வீட்டை சூழ்ந்த வெள்ளம்? நடப்பது என்ன?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகியதில் இருந்து அடுத்த ஹோஸ்ட் யார் என்ற கேள்வி காணப்பட்டது. இறுதியில் அதற்கு தகுதியானவராக விஜய் சேதுபதி களமிறங்கினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி செட் ஆவாரா? என பலரும் விமர்சித்து வந்த நிலையில் தன்னுடைய முதல் ஷோவிலேயே அனைவரையும் வியக்க வைத்து கடந்த வாரம் ஒரு நடுவராக மட்டுமில்லாமல் மக்கள் பிரதிநிதியாகவே செய்யப்பட்டு சில நுணுக்கமான கேள்விகளையும் போட்டியாளர்களிடம் வினாவி அசத்தி இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில்  முதலாக உள்ளே வந்து முதல் போட்டியாளராகவே வெளி ஏறினார் தயாரிப்பாளர் ரவீந்தர்.  இவர் தரமான கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளராக இருந்தும் சில பிசிக்கல் டாஸ்க்கில் விளையாட முடியாமல் சிரமப்பட்டார். மேலும் மகாலட்சுமி தரத்தில் இருந்து தனது கணவரை வெளியே அனுப்பிவிடுமாறு கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பல விதங்களிலும் வெள்ளமாக காணப்படுகிறது. எனவே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடக்குமா பிக் பாஸ் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் வெள்ளம் செல்லாத அளவிற்கு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் துரித நடவடிக்கை எடுத்தாலும், செம்பரம்பாக்கம் பகுதியில் தேங்கி நிற்கும் நீரை பார்த்து போட்டியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு ரசிகர்களும் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement