• Dec 26 2024

எப்பிடி சாகனும் என்று விஜயகாந்த் ஆசைப்பட்டாரோ, அப்பிடியே தான் நடந்திச்சு- உணர்ச்சிவசப்பட்ட பிரபல இயக்குநர்

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிரபல நடிகரான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உயிரிழந்தார். இவரது இறப்பு திரைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அவரது சாமதிக்குச் சென்று பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சி நடத்தியது.இந்த நிகழ்ச்சியில் சினிமாவில் அவருடன் பணியாற்றியவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து விஜயகாந்தின் வள்ளல் குணம் குறித்தும், அவரின் நல்ல பண்புகள் குறித்தும் பேசினார்கள். 


அப்போது பேசிய தயாரிப்பாளர் டி. சிவா, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திடீர் மறைவை விஜயகாந்தால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எம்ஜிஆர் இறப்புக்கு பின் அவரை உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கார்ல திரும்பி வந்து கொண்டு இருந்தோம். அதுவரை இறுக்கமா அமைதியா இருந்த விஜயகாந்த், செத்தா இப்படி சாகணும்யா  என்று சொன்னாரு. அது இப்போது கேப்டன் மறைவுல நடந்து இருக்கு.

விஜயகாந்த் இறந்த போது மக்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதை பார்த்த போது எனக்கு, விஜயகாந்த் அன்று சொன்னது தான் நினைவுக்கு வந்தது. அவர் செஞ்ச புண்ணியம் காரணமா அவர் நினைச்சது நடந்துருச்சு என்று அவர் உணர்ச்சிவசமாகப் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement