• Dec 27 2024

நயன் வாசலில் செருப்பு தோரணம் தான் கிடைக்கும்.. அவ்வளவு கண்டிஷன், அராஜகங்கள்.! பிரபலம் பகிர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

ஐயா படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்தவர் தான் நடிகை நயன்தாரா. இவரது திரை உலக வாழ்க்கையிலும்  தனது சொந்த வாழ்க்கையிலும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு தனது உழைப்பால் உயர்ந்துள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் சிம்புவை காதலித்த இவர், அதற்குப்பின் பிரபு தேவாவை காதலித்து அவரின் பெயரையும் கையில் பச்சை குத்திக் கொண்டார். அந்த காதலும் முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு நயன்தாரா  மீண்டு எழுவதே கஷ்டம் என பலர் கூறினார்கள்.

ஆனாலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட  தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகின்றார். அத்துடன் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார் .

சமீபத்தில் வெளியான ஜவான் படம் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதைகளை மட்டும்  தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.


இந்த நிலையில், தான் குடி இருக்கும் அப்பார்ட்மெண்டில் நடிகை நயன்தாரா நடந்து கொள்ளும் முறை குறித்து தகவல் ஒன்றை கூறியுள்ளார் பிரபல சினிமா செய்தியாளர் ஆன செய்யாறு பாலா.

அதன்படி அவர் கூறுகையில், நயன்தாரா வீட்டு வாசலில் எப்போதுமே எக்கச்சக்கமான செருப்புகள் வழியை அடைத்து கிடக்கும். நயன்தாரா வரும்போது அவர் எதிரே யாரும் வரக்கூடாது. தங்களது குழந்தைகள் நீச்சல் குளத்தில் விளையாடும் போது யாரும் அவர்களை போட்டோ எடுப்பதை ஒருபோதும்  அனுமதிப்பதும் இல்லை.

அது மட்டும் இல்லாமல் தங்களது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய வரும் உணவு டெலிவரி ஊழியர்கள் கூட சேவர்களைப் போல ஒரு ஓரமாக நின்று தான் உணவை கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். இவ்வாறு பல கண்டிஷன்கள் போட்டபடி தான் அந்த அப்பார்ட்மெண்டில் நயன்தாராவின் குடும்பத்தினர் இருக்கின்றார்கள். இவ்வாறு செய்யாறு பாலா கூறியுள்ளார்

Advertisement

Advertisement