• Dec 25 2024

மணமகன் பெயரை முதுகில் எழுதியிருந்த ப்ரியா அட்லி.. மணமகள் கோபித்து கொள்ள மாட்டாரா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் அட்லி தனது மனைவி பிரியாவுடன், முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில் அவர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் மும்பையில் 3 நாட்கள் மிகவும் ஆடம்பரமாக நடைபெறும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் தமிழ் திரை உலகில் இருந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஒரே இயக்குனர் அட்லி என்ற நிலையில், அவரும், அவரது மனைவியும் இந்த திருமணத்தில் ஆடம்பரமான காஸ்டியூம் அணிந்து கலந்து கொண்டனர். குறிப்பாக அட்லியின் மனைவி ப்ரியா இந்த திருமணத்திற்கு கலந்து கொள்ள வந்த போது அணிந்திருந்த காஸ்ட்யூம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ப்ரியா அணிந்திருந்த உடையின் பின்புறம் ஆனந்த் ஆர்மி என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை அட்லி தனது மனைவியை பின்புறமாக திரும்ப செய்து முதுகில் எழுதிய அந்த எழுத்துக்களை காட்டும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்துள்ளது. மணமகன் பெயரை முதுகில் எழுதினால் மணமகள் கோபித்து கொள்ள மாட்டாரா? என்பது உட்பட பல கமெண்ட் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement