• Dec 25 2024

அட்லியை விட்டுக் கொடுக்கவே முடியாது,சிவகார்த்திகேயனை கழுவி ஊற்றும் ரசிகர்கள்- வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டாரே

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது அயலான் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர் படமாக உருவாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின்  ட்ரெய்லர்  5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 


இந்நிலையில் அயலான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் அட்லி குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அதாவது அட்லி அவரது சாதனைகளை அவரே முறியடித்து வருகிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லி, ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க வைத்து ஜவான் படத்தை இயக்கினார். 

அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இதனை பாலிவுட்டே கொண்டாடும் போது, தமிழ்த் திரையுலகமும் அட்லியின் வெற்றியை கொண்டாடியிருக்க வேண்டும். 

அதேநேரம் அட்லி இயக்கும் படங்கள் மீதும், கதை குறித்தும் விமர்சனங்கள் இருக்கின்றன.அதற்காக நாம் அட்லியை விட்டுக்கொடுத்துவிட முடியாது. அதேபோல் அவர் பாலிவுட் சென்றுவிட்டதால் நமக்கு தான் பெரிய இழப்பு எனவும், விரைவில் அட்லியும் விஜய்யும் இணைந்து சூப்பர் ஹிட் கொடுப்பார்கள் என்பதாகவும் பாராட்டியிருந்தார்.


இதனால் ரசிகர்கள்"உலகத்துல எங்கபோனாலும் திருடன் திருடன்தான். Avoid Toxic positivity!" என வெளுத்து வாங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement