• Dec 26 2024

அமிதாப் பச்சனின் பேரனுக்காக மும்பாய் பறந்த அட்லீ..! காரணம் தெரியுமா? ட்ரெண்டாகும் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி. இவருடைய முதல் படமே இவருக்க சூப்பர் ஹிட் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. படம் மௌனராகம் போல் இருந்தாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் போன்ற படங்களையும் இயக்கி இருந்தார்.


இந்த நிலையில், ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதையடுத்து, தற்போது அமீதாப் பச்சனுக்காக மீண்டும் மும்பை பறந்துள்ளார் அட்லீ.

அதன்படி, அட்லீ தொடர்ந்து பாலிவுட்டில் படங்கள் இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் அவரது மனைவி ப்ரியாவும் மும்பை சென்றுள்ளனர். 


மேலும், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஹீரோவாக நடித்துள்ள தி ஆர்ச்சீஸ் திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. ஜோயா அக்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர், ஷாருக்கான் மகள் சுஹானா கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, தி ஆர்ச்சிஸ் படத்தின் ப்ரீமியர் ஷோ மும்பையில் திரையிடப்பட்டது. அதனை பார்க்க அட்லீக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அட்லீயும் அவரது மனைவி ப்ரியாவும் மும்பை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement