• Dec 27 2024

ஒரே நேரத்தில் 2 கொண்டாட்டம்.. மனைவி ப்ரியா, நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் கட்டிப்பிடித்து அட்லி ஜாலி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ஒரே நாளில் இரண்டு கொண்டாட்டங்கள் அட்லி மற்றும் அவரது மனைவி ப்ரியா கொண்டாடிய நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் அட்லி கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது தனது மனைவியுடன் இணைந்து போட்டோஷூட் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் உருவான ’தெறி’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய இருவரும் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் விஜய் கேரக்டரிலும் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தனர் என்பதையும் பார்த்தோம்.

’பேபி ஜான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். இதில் அட்லி, அவரது மனைவி ப்ரியா, வருண் தவான்,  கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து படப்பிடிப்பு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ’பேபி ஜான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாள் மட்டுமின்றி நாயகன் வருண் தவான் பிறந்தநாள் என்பதால் இந்த விழா இரட்டை விழாவாக நடந்தது. அட்லி மற்றும் பிரியா ஆகிய இருவரும் ஜாலியாக இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement