• Dec 25 2024

உயிருக்கு போராடும் பிஏ... கழுத்தை நெறிக்கும் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட ரோகினி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவின் அம்மா போலீசில் இருப்பதால் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டரிடம் சீதாவும் மீனாவும் கையெடுத்து கூம்பிட்டு கதறி கேட்கின்றார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் ஒருநாளுக்குள் சத்யா வரவில்லை என்றால் மீண்டும் உங்களது அம்மாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வருவோம் என்று அவரை விடுவிக்கின்றார்கள்.

இதை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் நம்பர் ஒன்றை போலீஸ்காரர் கொடுக்கின்றார். அதன்படி மீனாவும் முத்துவும் குறித்த வக்கீலை பார்ப்பதற்காக செல்லுகின்றார்கள். அங்கு அவர் இந்த பிரச்சனையை ஈஸியா முடிக்கிறதுக்கு ஒரே வழி உங்களுடைய அம்மா வாபஸ் வாங்குவது தான்.. அப்படி இல்லை என்றால் காசு செலவாகும் என்று சொல்லுகின்றார்..

இன்னொரு பக்கம் சிட்டி வர சொன்னதால் ரோகிணியும் வித்யாவும் அங்கு செல்லுகின்றார்கள். அங்கு போனதும் பிஏ உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக அவரை கேரளாவுக்கு அனுப்ப இரண்டு லட்சம் வேண்டும் அப்படி இல்லை என்றால் அவர் செத்து விடுவார் என்று சிட்டிசொல்லுகிறார்.


மேலும் இது போலீஸ் பிரச்சனை ஆனால் முதலில் உங்களுடைய பெயரை தான் சொல்ல வேண்டி வரும் என்று ரோகிணியை மிரட்ட, தான் எப்படியாவது பணம் ரெடி பண்ணுகின்றேன் என்று ரோகிணி அங்கிருந்து செல்லுகின்றார். ஆனால் அதன் பின்பு பிஏவும் சிட்டியும் சேர்ந்து போட்ட பிளான் இது என தெரிய வருகின்றது.

அதாவது பிஏ ரோகிணி எவ்வளவு பணம் கேட்டாலும் தருவா என்று சிட்டிக்கு சொல்ல, சிட்டி இப்படி ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் அம்மாவை வாபஸ் வாங்குமாறு பேசிக்கொண்டிருக்க, இடையில் புகுந்த மனோஜ் அவன் செஞ்ச தப்புக்கு ஜெயிலுக்கு போனால் தான் சரி என்று சொல்ல, உனக்கு ஜெயிலுக்கு அனுப்புறேண்டா அவ்வளவு இஷ்டம் தானே என்று முத்து எமோஷனல் ஆகின்றார்.

இதனால் மனோஜ் எதுவும் பேசாமல் ரூமுக்கு சென்று விடுகின்றார். அதன் பின்பு அண்ணாமலை பார்வதி வீட்டுக்கு செல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement