• Jan 12 2025

தளபதி 69 படம் பற்றி தீயாய் பரவும் தகவல்.. இது விஜய்க்கு தெரியுமா? கிண்டலடித்த பிரபலம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்பொழுது இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற கோட் திரைப்படம், இதுவரையில் 380 கோடி வரையில்  வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதை தொடர்ந்து தளபதி 69ஆவது படம் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. அதன்படி  விஜயின் கடைசி படமான இந்த படத்தை எச். வினோத் இயக்க உள்ளார்.

பெங்களூரை மையமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தளபதி 69 படத்தை மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள கேவிஎன் நிறுவனம் முதல் படத்திலேயே விஜய், அனிருத், ஹெச் வினோத் காம்பினேஷனில் ஜாக்பாட் அடிக்க களமிறங்கியுள்ளது.


விஜய் நடிக்கும் கடைசி படம் இது என்பதால் இந்த படம் மீது  எதிர்பார்ப்பு காணப்படுவதோடு அவர் இதற்குப் பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விலகி அரசலில் நுழைய உள்ளார் என்று கூறப்படுகின்றது. இதன் காரணத்தினால் விஜயின் கடைசி படம்  அவருடைய அரசியலை பற்றி பேசும் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், எச் வினோத் இயக்க உள்ள விஜயின் கடைசி படத்திற்கு அவருக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் 275 கோடி என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் சாருக்கானை விடவும் விஜய் அதிக சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவ்வாறான நிலையில் இந்த தகவலை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் இந்த விஷயம் விஜய்க்கு தெரியுமா? என கிண்டலாக கேட்டுள்ளார். கோட் படத்திற்கு விஜய் 200 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். தற்போது தளபதி 69 படத்தில் அவர் அதைவிட அதிகமாக சம்பளம் வாங்குவார் என்ற கணிப்பிலேயே இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement