• Jan 12 2025

வேட்டையன் ஷூட்டிங்கில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்..! திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தில் அமிர்தாபட்சன், ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் என பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படம் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்த  திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வர வேற்பை பெற்றது. தற்போது லோகேஷ்  கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகின்றார்.

அதுபோல வேட்டையன் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில், இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் தீவிரமான அரசியல் பேசும் படமாக பலரது பாராட்டுகளையும் பெற்றது.


தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை எடுத்துள்ளார். இதில் சூப்பர் ஸ்டாரின் மாஸையும் தன்னுடைய அரசியல் கருத்துக்களையும் அவர் எப்படி இணைத்து கமர்சியல் படத்தை கொடுக்கப் போகின்றார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில், வேட்டையன் படத்தில் நடிக்கும் ரித்திகா சிங் தொடர்பான வீடியோ ஒன்றை இதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட்டுள்ளது. அதில் ரூபா என்ற கேரக்டரில் ரித்திகா சிங் நடித்துள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement