• Oct 26 2024

பட்டையை கிளப்பும் வாழை திரைப்படம்... 4நாள் வசூல் விபரம்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் செல்வராஜின் வாழை திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் மாரி செல்வராஜ்.


இவருடைய சிறு வயதில் ஏற்பட்ட உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு தான் வாழை படம் உருவாகியுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


இந்த நிலையில், வாழை திரைப்படம் கடந்த 4 நாட்களில் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது வாழை திரைப்படம்.




Advertisement