• May 28 2026

அப்படியான பெண்களிடம் மட்டும் உஷாரா இருங்க.. ஆண்களுக்கு அட்வைஸ் கொடுத்த நடிகை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான சேவல் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா, தனது முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 

இந்த படத்தை தொடர்ந்து துரோகி, தெனாவட்டு, தம்பிக்கோட்டை என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். ஆனாலும், அவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தது.

அதன் பின்னர் மலையாளத்திலும் கால் தடம் பதித்தார். பின்னரும் தமிழில் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா, ஆம்பள போன்ற படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.

எனினும், இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார்.


இந்த நிலையில், நடிகை பூனம் பாஜ்வா தனது ரசிகர்களின் கேள்விக்கு அளித்த பதில் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, உங்களுடன் தோழியாக, காதலியாக, மனைவியாக பயணிக்கும் பெண்கள் எந்த நாட்டிற்கும் மகாராணியாக இல்லாமல் போகலாம். 

ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்கள் தான் மகாராணி. அவர்களை போற்றி கொண்டாடுங்கள். அவர்களின் அன்பையும் அழகையும் பாராட்டுங்கள். ‘சரி, எல்லாத்தையும் மறந்துடலாம்’ என்று சொல்லும் பெண்களிடம் மட்டும் உஷாராக இருங்கள். 

ஏனெனில் பெண்கள் எதையும் மறக்க மாட்டார்கள். அப்படி ஒரு பெண் உங்களிடம் சொன்னால், நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என ஆண்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement