• Apr 23 2026

விசித்ராவின் கணவர் ஒப்புக் கொண்ட பகீர் தகவல்! இந்த டாப்பிக் பற்றி கமல் விசாரிப்பாரா? கடந்து செல்வாரா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை விசித்ரா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல், எங்க முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார். இவர் தற்பொழுது பிக்பாஸ சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.

இதில் இவர் விளையாடும் முறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அத்தோடு சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்குமளவுக்கு இவர் விளையாடி வரும் ஸ்ராட்டஜியும் நன்றாக உள்ளது.

இந்த நிலையில், தனது சினிமா வாழ்க்கையில் இடம்பெற்ற கசப்பான அனுபவத்தை பிக் பாஸ் வீட்டில் பகிர்ந்துள்ளார். அது தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. இவ்வாறான நிலையில், விசித்ராவின் கணவர் ஷாஜியே வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.


அதன்படி குறித்த வீடியோவில், விசித்ரா தன்னை கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டர் யார் என சொல்லாத நிலையில், அது பிரபல தெலுங்கு ஸ்டன்ட் மாஸ்டர் ஏ. விஜய் தான் என்பதை விசித்ராவின் கணவர் ஷாஜியே குறித்த வீடியோவில் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், குறித்த படப்பிடிப்பு நடந்த நேரத்துல நாங்க  நண்பர்களா கூட இல்ல. நான் ஹோட்டலில் மேனேஜராக இருந்த நிலையில், விசித்ராக்கு ஹோட்டல் அறைகளை மாற்றிக் கொடுத்து அவரை காப்பாற்ற நினைத்த ஒரு சக மனிதனாக மட்டுமே இருந்தேன். 

இதை தொடர்ந்து, இந்த விசயத்துல நீ ஏன் தலையிடுற.. இது எங்க படக்குழு பிரச்சனை என அந்த பெரிய நடிகரே என்னை மிரட்டினார்.  என்றும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஹோட்டலை செக்கவுட் செய்துட்டு விடுங்க, என்ட ஹோட்டலில் இப்படி நடப்பத அனுமதிக்க முடியாது என கூறினேன் என்றார்.


அதன் பின்னர், இது தொடர்பான வழக்குகள் திருமணத்துக்கு பிறகும் இருந்தது. ஆனால், நடிகர் சங்கம் உட்பட அனைவரும் எங்கள் வழக்கை வாபஸ் வாங்க வைக்க மட்டுமே போராடினாங்க' என மேலும் கூறினார்.

இதேவேளை, இந்த வாரம் கமல் தொகுத்து நடத்தும் நிகழ்ச்சியில் விசித்ரா சொன்னவை பற்றி விசாரிப்பாரா? இல்லை கடந்து செல்வாரா? என பொறுத்து இருந்து பாப்போம்..

இதை பற்றி பேசுவாரா என ஜோ மைக்கேல் கேட்க, நிச்சயம் இந்த டாப்பிக்கை அவர் பேசாமல் கடந்து சென்று விடுவார் என அசிங்கப்படுத்தி விட்டார். என்ன ஆகுது என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement