• Dec 26 2024

தெரு தெருவா சுத்தினது வீண் போகல... கருடன் படத்தில் நடித்த பாரதி கண்ணம்மா

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் 'பாரதி கண்ணம்மா' என்ற  சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் தான் ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியல் மூலம் பட்டி தொட்டியங்கும் வெளிச்சத்துக்கு வந்தார். இதை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

2019 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்ற விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடிக்க கமிட் ஆன ரோஷினிக்கு , மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் அந்த சீரியலின் ஒரு காட்சியில் கர்ப்பமாக இருக்கும் போது தனது பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வேறு வேறு இடங்களுக்கு செல்லும் அந்த சம்பவம் இளைஞர்களிடையே மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட ஒரு கண்டன்ட்டாக காணப்பட்டது. 


இதைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து விலகி இருந்தார். அதற்கு காரணம் அவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தான்.


இந்த நிலையில், தற்போது நடிகர் சூரி நடித்த கருடன் படத்தில் ரோஷினி ஹரிபிரியன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

இவ்வாறு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு  சென்ற நடிகைகளின் பட்டியலில் தற்போது ரோஷினி ஹரி பிரியனும் சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement