• Dec 25 2024

பவதாமா நீ எனக்கு தோழியும் இல்ல, சகோதரியும் இல்ல..! ஆனா..? வனிதாவை உலுக்கிய பவதாரிணியின் மறைவு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக காணப்படும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். 

இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில். நேற்று மாலை 5.20 மணிக்கு இலங்கையில் திடீரென மரணமடைந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


இந்த நிலையில், நடிகையும் பிக் பாஸ் 3 போட்டியாளருமான வனிதா  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவதாரணியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் அதில் கூறுகையில், பவதாமா நீ எனக்கு வெறும் தோழி இல்லை, நீ எனக்கு சகோதரி இல்ல, ஆனால் நீ எனக்கு யார் என்பது உனக்கு தெரியும்.... நமக்குள் இருந்த உறவு எப்போதுமே நீடித்திருக்கிறது. 


நீயும் நானும் ஜீவாமை மிகவும் மிஸ் செய்திருப்போம். அவருக்கு என்னுடைய அன்பை கொடுத்துவிடு, நீ கடவுளின் குழந்தை, நீ இந்த உலகத்தை விட்டு பிரிந்தது என்னை அதிகமாக உலுக்கி இருக்கிறது.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்னுடைய முதல் பாடலை நீ தான் பாடினாய். அதற்குப் பிறகு பல பாடல்கள் பாடியிருக்கிறார். உன்னை மீண்டும் சந்திக்கும் வரை சிறுவயதில் நமக்குள் இருந்த உறவு என்னை உறுத்திக் கொண்டே இருக்கும். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... என்று தன்னுடைய மன கஷ்டத்தை விவரித்து இருக்கிறார் வனிதா.

Advertisement

Advertisement