• Dec 24 2024

பிக் பாஸ் ஐஷுவின் அப்பா அடித்த சிக்ஸர்..! தர்ஷா குப்தாவுக்கு தீவிர ரசிகரா இருப்பாரோ.!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த ஷோ ஆரம்பிக்கப்பட்டு மக்களிடம் கிடைத்த பேராதரவின் அடிப்படையில் தற்போது எட்டாவது சீசன் நடைபெற்று வருகின்றது. நாளாந்தம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் முற்றிலும் மாறுபட்ட ரீதியில் ஒரே  வீட்டை இரண்டாகப் பிரித்து ஆண்கள் அணி, பெண்கள் அணி என சிறப்பாக கொண்டு நடத்தி வருகிறது.

கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் முதலாவதாக தயாரிப்பாளர் ரவீந்தர் எலிமினேட் ஆகி சென்றிருந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரபலமாக காணப்பட்ட நிலையில், இவர் சிறந்த கன்டென்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனாலும் அவர் வெளியேறியிருந்தார்.

இதை தொடர்ந்து கடந்த வாரம் சீரியல் நடிகரான அர்ணவ்  பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி சென்றிருந்தார். இறுதியில் அவர் போகும் போது பாய்ஸ் டீம் பத்தி தனது வன்மத்தை  கொட்டியதால் விஜய் சேதுபதி அவருக்கு உரிய அட்வைஸை செய்து அனுப்பியிருந்தார்.


இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷா குப்தா எலிமினேட் ஆகியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. எனினும் இன்னும் உறுதியாகவில்லை .

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8ல் எலிமினேட் ஆன தர்ஷா குப்தாவுக்கு கடந்த சீசனில் போட்டியாளராக பங்கு பற்றி சர்ச்சைகளில் சிக்கிய ஐஸ்வர்யாவின் அப்பா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

d_i_a

அதாவது பிக் பாஸ் ஏழாவது சீசனில் பங்கு பற்றிய ஐஸ்வர்யா, சக போட்டியாளரான நிக்சனுடன் காதலில் விழுந்தார். பிக் பாஸ் வீட்டில் அவர்கள் செய்த அட்டூழியங்கள் எல்லை மீறியதால் ஐஷுவின் பெற்றோர் நேரடியாகவே பிக்பாஸ் செட்டுக்கு வந்து  தமது மகளை வெளியே விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். ஐஷு அதன் பின்பு எலிமினேட் ஆகி வெளியே சென்று இருந்தார்.

தற்போது ஐஷுவின் அப்பா பிக் பாஸ் சீசன் 8ல் பங்கு பற்றிய தர்ஷா குப்தா எலிமினேட் ஆனதை தொடர்ந்து தனது இன்ஸ்டா  பக்கத்தில் அவருக்கு தைரியம் கொடுக்கும் வகையில் போஸ்ட் ஒன்றை இட்டுள்ளார். தற்போது குறித்த போஸ்ட் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement