பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனிதா சம்பத், அவருடைய அழகினாலும் வாசிப்பு திறமையினாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்பட்டார். அதன் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
ஆரம்பத்திலேயே இவருக்கு அதிகளவான ஃபேன்ஸ் பேஜ் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது. அதில் இவர் சுரேஷ் சக்கரவர்த்தியோடு சண்டை போட்ட விடயம் பலரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனாலும் இவர் பிக்பாஸில் தன்னுடைய கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசியது பலருக்கு சலிப்பை கொடுத்தது.
இதைத்தொடர்ந்து அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவருடைய தந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் அனிதாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தந்தையின் உடலை பார்க்க முடியாமல் அவர் பட்ட கஷ்டங்களை பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்பு தமது கடின உழைப்பினால் இரண்டு வருடங்களுக்கு முன்பு புது வீடு கட்டி இருந்தார் அனிதா சம்பத். தான் பிறந்ததிலிருந்து வாடகை வீட்டில் தான் வளர்ந்து வந்ததாகவும் அப்பாவின் கனவை நிறைவேற்றி விட்டதாகவும் மிகவும் உருக்கமாக போஸ்ட் போட்டும் இருந்தார்.
இந்த நிலையில், அனிதா சம்பத் இரண்டாவதாக கட்டிய வீட்டில் குடிப்பெயர்ந்து உள்ளார். அவர் புதிதாக கட்டிய வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படங்களை வெளியிட்டு 'இதை என்னுடைய அம்மாவின் ஆசைக்காக நான் இரண்டாவதாக வாங்கிய வீடு.. இந்த வளர்ச்சி உங்கள் அன்பு இல்லாமல் எனது கிடைத்திருக்காது..' என்று பகிர்ந்துள்ளார். அனிதாவின் இந்த வளர்ச்சிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!