• Apr 24 2026

பார்வதி-கமருதீன் பெயரை அறிவித்த பிக்பாஸ்; அரோரா, திவ்யாவின் முகம் சுளிக்க வைக்கும் செயல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த சீசனின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளன. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சாண்ட்ராவை தாக்கிய சம்பவம் காரணமாக விஜே பார்வதி மற்றும் கமருதீன் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் சரியான தீர்ப்பாக கருதப்பட்டது.

எனினும் அதற்குப் பிறகு சான்றாவின் நடிப்பு அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிய வந்தது இதனால் பார்வதி தான் உண்மையான  டைட்டில் வின்னர்  என  அவருக்கு சார்பாக பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினர் 

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் பழைய போட்டியாளர்கள் வந்த நிலையில், இறுதியில் பார்வதி மற்றும் கமருதீன் தவிர மற்ற போட்டியாளர்களை அமர வைத்து, சீசனின் சிறந்த தருணங்கள் வீடியோவாக காட்டப்பட்டது. 


பின்னர் பிக்பாஸ் போட்டியாளர்களின் பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பார்வதி மற்றும் கமருதீன் பெயர்களையும் குறிப்பிட, பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் எழுந்து நின்று கைதட்டினர்.

ஆனால் அரோரா மற்றும் திவ்யா கணேஷ் மட்டும் எழுந்திருக்காமல் அமர்ந்தபடியே கைதட்டியதை ரசிகர்கள் கவனித்துள்ளனர். “சாண்ட்ரா மன்னித்தாலும், அரோராவும் திவ்யாவும் இன்னும் மன்னிக்கவில்லை போல” என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement