• Dec 26 2024

லீக்கான பிக் பாஸ் கொண்டாட்டம் வீடியோ... குஷியில் ரசிகர்கள்... எகிறும் எதிர்பார்ப்புகள்...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் டெலிகாஸ் ஆகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சியானது பல சீசன்களை கடந்திருந்தாலும் சமீபத்தில் BIG BOSS 7 நடைபெற்று முடிந்ததுடன் அதன் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டதும் தெரிந்த விடயமே ஆகும் .


இந்த பிக் பாஸ் முடிந்த உடன் நடைபெறும் பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்வுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கொண்ட ஒன்று என்றே கூறலாம் அனைத்து சீசன்களும் முடிந்த உடன் நடைபெறும் இந்த நிகழ்வு BIGG BOSS 7 முடிந்த இரண்டு மாதங்கள் ஆனா பின்பும் நடைபெறாதது குறித்து  ரசிகர்களிடையேயும் ஊடகங்களிடையேயும் பல விமர்சனங்களை பெற்று வந்தது.


இந்த நிலையில் இந்த சீஷனுக்கான பிக் பாஸ்  சூட்டிங் அணைத்து நடைபெற்று முடிந்துள்ளது. இது வருகின்ற சனி கிழமை விஜய் டிவியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் விஜய் டிவி செட்க்குள் இருந்துகொண்டே தனது கேமராவில் விஜித்ரா அவர்கள் எடுத்து வெளியிட்ட காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகின்றது.


அந்த காணொளியில் அர்ச்சனா ,பூர்ணிமா ,மாயா ,விஜித்ரா ஆகியோர் பாடல் ஒன்றுக்கு ஆடலும் பாடலுமாக கொண்டாடுகின்றனர். மாய ,பூர்ணிமா காங் மற்றும் அர்ச்சனா ,விஜித்ரா காங் இவர்கள் பிக் பாஸ் வீட்டில்  எப்படிப்பட்ட எதிரிகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனாலும் இவர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக  இருப்பது ரசிகர்களுக்கு பூரிப்பை ஏற்றப்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வில் அனைவரது மனதிலும் இடம் பிடித்த பிரதீப் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement