• Dec 25 2024

பார்ட்டியில் பாம்பு விஷத்தை சப்ளை பண்ணிய பிக்பாஸ் பிரபலம் கைது! இதையும் ருசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா டா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் ஓடிடியில் மட்டும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் தான் எல்விஷ்.

26 வயதான பிரபல யூடியூப்பரான அவர், தற்போது கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதாவது, உத்திர பிரதேச மாநிலம், நொய்டாவில் ரேவ் பார்ட்டி எனப்படும் மது விருந்துக்களை நடத்தியதாகவும், அதில் பாம்பு விஷம் சப்ளை பண்ணியதாகவும் எல்விஷ் யாதவ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது .


மேலும் இது தொடர்பாக எல்விஷ் யாதவ் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் ஐந்து பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தனர்.

இதற்கு இடையில் ரேவ் பார்ட்டியில் பாம்பு விஷம் சப்ளை செய்யப்பட்டதில் தனக்கு தொடர்பு இல்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.

ஆனாலும் இவ்வழக்கை விசாரித்த காவல்துறையினர் அவரை கைது செய்து தற்போது  15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement