• Oct 26 2024

சோசியல் மீடியாவில் மோதிக்கொள்ளும் பிக் பாஸ் ரசிகர்கள்! தீயாய் பரவும் ஸ்பெஷல் கவனிப்பு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. இன்னும் ஒன்று ,  இரண்டு நாட்களில் டைட்டில் வின்னர் யார் என தெரிந்துவிடும். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்கள் இவ்வளவு நாட்களாக பிக் பாஸ் வீட்டில் காட்டிய அதிரடி விளையாட்டுக்களை பிக் பாஸ் குறும் பயண வீடியோ போட்டு காட்டி போட்டியாளர்களை கண் கலங்க வைத்து விட்டார் . 

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் ரசிகர்கள் யார் வின்னர், யார் ரன்னர் என ஒரு கருத்து கணிப்பு போட்டு தங்களுக்குள்ளே போட்டி போடுவதை காணக்கூடியதாக உள்ளது.


அதன்படி அர்ச்சனா ரசிகர்கள் சொல்கிறார்கள் , அர்ச்சனா தான் வின்னர், மணி ரன்னர் என்றும், மாயா ரசிகர்கள் சொல்கிறார்கள் மாயா வின்னர் , தினேஷ் ரன்னர் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், தினேஷ் ரசிகர்கள், தினேஷ் தான் டைட்டில் வின்னர் , விஷ்ணு ரன்னர் ஆவார் என்றும் ,மணி ரசிகர்கள் உறுதியாக சொல்கிறார்கள் மணி தான் வெற்றிக்கு சொந்தக்காரர் , அர்ச்சனா ரன்னர் என்றும் கணிப்பிட்டுள்ளனர்.


எனினும் மக்கள் விருப்பம் தலைவி அர்ச்சனா வின்னர் என்றும் மணி ரன்னர் என்றும் கூறியுள்ளனர்.

இவ்வாறு போட்டியாளர்களின் ரசிகர்கள் யார் வின்னர் என்று அவர்களிடையே போட்டி இடுவது சமூகவலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் காணக்கூடியதாக உள்ளது .

Advertisement