விஜய் டிவி தொலைக்காட்சின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 கிராண்ட் பின்னாலே இன்று ஒளிபரப்பாகவுள்ளது. இதில் யார் இந்த சீசனுக்கான டைட்டிலை வெற்றி பெறப் போகின்றார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் அதிரடியான ப்ரோமோ ரிலீஸாகி உள்ளது.
கடந்த 100 நாட்களாக பல திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 8 இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே கிராண்ட் பின்னாலேக்கான சூட் எடுக்கப்பட்டது. இதன் அடைப்படையில் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்று செய்திகள் இணையத்தில் கசிந்து விட்டன. இதன் அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி தளத்தில் இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் கிராண்ட் பின்னாலே ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களமாய் ஆரம்பமான கிராண்ட் பின்னாலேவில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். தர்ஷிகா, அன்ஷிதா, சுனிதாவின் அதிரடியான நடனத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டுகிறது. ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியின் இறுதி திருவிழா மக்கள் கொண்டாட காத்திருக்கும் பெரு விழா இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அது தொடர்பான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Listen News!