• Dec 26 2024

அருண் விஜய் படத்தில் இணைந்த பிக் பாஸ் ஹீரோ.. தடபுடலாக நடைபெற்ற படப்பிடிப்பு பூஜைகள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய்.

ஏ. எல் விஜய் இயக்கத்தில், அருண்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் மிஷன் சாப்டர் -1. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வசூலித்திருந்தது.

தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து  முடித்துள்ளார் அருண் விஜய். அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இவர் நடித்துள்ள பார்டர் படமும் வெளியாவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அருண் விஜயின் அடுத்த படம்,  மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் உருவாகுவதாக கூறப்பட்டது.


இந்த நிலையில், அருண் விஜய் நடிக்கும் 36 வது படத்திற்கான படப்பிடிப்பு பூஜைகள் இன்றைய தினம் அமர்க்களமாக இடம்பெற்றுள்ளது.

இதில் பிக் பாஸ் பாலாஜி, லோகேஷ் கனகராஜ் மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகி சித்தி இத்னானி ஆகியோர் கலந்துள்ளனர்.

மேலும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைக்க உள்ளதாகவும், கன்னட நடிகர் இதற்கு வில்லனாக எதிர்பார்க்கப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement