• Dec 28 2024

இளசுகளை கவர்ந்திழுக்கும் கொள்ளை அழகில் பிக் பாஸ் பிரபலம்! க்யூட் போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டு நடிகை ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கு நடிப்புக்கும் திறமைக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதன்பின் தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் இவரை மேலும் பேமஸ் ஆக்கியது. பெரிய திரைக் கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகின்றார்களோ அதே போலவே சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவதை  ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்து மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த பல வருடங்களாக இருவரும் பிரிந்து வாழுகின்றார்கள்.


இதைத்தொடர்ந்து பிக் பாஸ் 6வது சீசனில்  கலந்து கொண்ட ரட்சிதா, அங்கு தனது திறமையை பயன்படுத்தி சில வாரங்கள்  தாக்கு பிடித்திருந்தார். அதில் அவரிடம் ராபர்ட் மாஸ்டர் தனது காதல் லீலைகளை காட்டிய போதும் அவர் அதுக்கு மடங்கவில்லை. இதை தொடர்ந்து ரட்சிதாவுக்கு பட வாய்ப்புகள் குவிய அதில் பிசியாக காணப்படுகின்றார்.

இந்த நிலையில், ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டா  பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் வெள்ளை நிறத்தில் பேண்டும், இளம் ஆரஞ்சு கலர் டி-ஷர்ட் அணிந்தபடி செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி காணப்படுகிறது.

Advertisement

Advertisement