• Dec 26 2024

ரக்சிதாவை மட்டுமல்ல.. இன்னொன்றையும் பறிகொடுத்த பிக்பாஸ் தினேஷ்.. இனி பியூஸ் போன பல்பு தான்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை ரக்சிதாவை அவருடைய கணவர் தினேஷ் பிரிந்த நிலையில் தற்போது அவருக்கு இன்னொரு பெரிய சோதனை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சீரியல் நடிகை ரக்சிதாவை சீரியல் நடிகர் தினேஷ் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போது எப்படியாவது இந்த சீசனின் டைட்டிலை வென்று ரக்சிதாவுடன்மீண்டும் இணைய வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் என்பதும் ஆனால் ரக்சிதா அவரை கண்டு கொள்ளவே இல்லை என்பது அவருக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் இணை செயலாளர் பதவியில் இருந்து தினேஷ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்த நிலையில் அதில் தலைவராக போட்டியிட்ட ரவிவர்மா தோல்வி அடைந்த நிலையில் அவருடைய ஆதரவாளராக இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தினேஷ் வெற்றி பெற்றார்.

ஆனால் ரவிவர்மா அணியை சேர்ந்தவர் தினேஷ் என்பதால் அவர் மீது சில நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ரவிவர்மா செய்த முறைகேட்டில் அவருக்கும் பங்கு உண்டு என்று குற்றச்சாட்டு கூறப்பட்டதை எடுத்து அவர் சின்னத்திரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருந்து தினேஷ் நீக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து தொடரில் நடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அவர் சின்னத்திரையில் பியூஸ் போன பல்பாக மாறி விடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரவிவர்மா மற்றும் தினேஷ் இருவரும் தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து  மேல்முறையீடு செய்திருப்பதாகவும் கண்டிப்பாக தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement