• Dec 26 2024

கமல் மாதிரி ஒரு மோசமான நபரை நான் வாழ்க்கையில் சந்தித்ததில்லை.. தாடி பாலாஜி மனைவி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல் மாதிரி ஒரு மோசமான மனிதரை நான் இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று கூறி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் கமல் தான் இருவரையும் சமாதானமாக பேசி வாழ வைத்தார் என்று கூறப்பட்டது.

மேலும் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கமல் அவர்கள் இடையே ஒற்றுமையை வரவழைக்க பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் அதன்பின் இருவரும் சமாதானமாக சில நாட்கள் வாழ்ந்த நிலையில் மீண்டும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா, கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது உங்களுக்கு உதவி செய்தாரே? என்று கேட்ட கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது, ‘கமல்ஹாசன் உதவி செய்தாரா? அவரைப் பற்றி தயவு செய்து பேசாதீர்கள், அப்படி பேசினால் நான் நிறைய கன்டென்ட் வெளியே விட வேண்டி இருக்கும், அவரைப்போல ஒரு மோசமான கேரக்டரை நான் இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement