• Apr 27 2025

கங்குவா 4வது நாளில் பிளாக் பாஸ்டர் ப்ளாப்- ஆஆ.? இதுக்கு மேல தேறுமா? தேறாதா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பல விமர்சனங்களையும் கடந்து வசூலில் வேட்டையாடி வருகின்றது. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் வெளியானது. இந்த திரைப்படம் 38 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளதென இதன் தயாரிப்பாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அது மட்டும் இன்றி கங்குவா திரைப்படம் 2000 கோடிகளை வசூலிக்கும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

எனினும் கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவியத் தொடங்கின. அது மட்டுமின்றி சூர்யாவை தனிப்பட்ட ரீதியாகவும் விமர்சனங்கள் மூலம் தாக்கினார்கள். இதையெல்லாம் பார்த்து சகிக்க முடியாத ஜோதிகா பதிலடி கொடுக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

கயவர்களின் விமர்சனங்களை கடந்து ஜெட் வேகத்தில் புக் ஆகும் கங்குவா டிக்கெட்ஸ்

கங்குவா வரலாற்று கதை அம்சம் கொண்ட படமாகவும் தற்காலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகவும் இரு ஜானரில் அமைந்துள்ளது. இதில் இரட்டை வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் மிரட்டி இருப்பார். மேலும் இதில் திஷா பாதணி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


இந்த நிலையில், கங்குவா படத்தின் நான்காவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அளவில் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஞாயிற்றுக்கிழமையான விடுமுறை தினத்தில் கங்குவாவின் வசூல்  இப்படி குறைந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நேற்றைய தினம் இந்திய அளவில் 3 கோடி ரூபாய் தான் வசூலித்து உள்ளதாம். இதனால் கங்குவா திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே 140 கோடிகளை தான் வசூலித்திருக்கும் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement