• Dec 26 2024

எது கதைன்னு அவங்களுக்கே தெரியலை.. ‘பிடி சார்’ படத்தை வச்சு செஞ்ச புளு சட்டை மாறன்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ‘பிடி சார்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் விமர்சனங்கள் கலவையாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை சரியில்லை என்றும், கோர்வையாக படத்தின் திரைக்கதை இல்லை என்றும், ரொமான்ஸ் காட்சிகள் தேவையில்லாமல் வருகிறது என்றும், ரஜினி விஜய் அளவுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி பில்டப் செய்கிறார் என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சுமாரான படங்களாக இருந்தாலும் சரி, குப்பை படங்களாக இருந்தாலும் சரி, அந்த படங்களை வச்சு செய்து கொண்டிருக்கும் புளு சட்டை மாறன், இந்த படத்தின் விமர்சனம் குறித்து கூறுகையில் ’இந்த படத்தின் இரண்டு கதைகளை சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்றும், ஒன்று ஜாதகத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை நம்புபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், இன்னொன்று பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணை இந்த சமூகம் எப்படி நடத்தக்கூடாது என்பதை சொல்லி இருக்கிறார்கள் என்றும்  தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் இரண்டு கதைகளை வைத்தது இயக்குனரின் முதல் தவறு என்றும் ஒன்று ஜாதகத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி முழு படமாக எடுத்திருக்கலாம் அல்லது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு இந்த சமூகம் கொடுக்கும் மரியாதை என்ன என்பதை விரிவாக எடுத்திருக்கலாம். இந்த இரண்டையும் ஒரே படத்தில் வைத்து திரைகதையையும் சொதப்பி உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் இரண்டு கதைகளை எடுத்துக் கொண்ட இயக்குனர் இரண்டு கதையையும் சரியாக கூறாமல் ஹீரோயிசத்தை மட்டுமே பெரும்பாலான காட்சிகள் கூறி இருக்கிறார் என்றும் ரொமான்ஸ் காட்சிகள் இந்த படத்துக்கு தேவையே இல்லை ஆனால் தேவையில்லாமல் திணித்து வைத்துள்ளார் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

படத்தின் கதை ஒரு நேர்கோட்டில் இல்லை என்றும் ஜோசியத்தில் ஆரம்பித்து, பிடி சாரில் ஆரம்பித்து, அதன் பிறகு பாலியல் பலாத்காரம் என ஆரம்பித்து, கடைசியில் நீதிமன்றம் என்று படத்தின் கதையை சொதப்பி உள்ளார்கள் என்று இந்த படத்தை அவர் வச்சு செய்துள்ளார்.

Advertisement

Advertisement