• Dec 26 2024

100 கோடி வசூலா? மனசாட்சியோடு உருட்டுங்கப்பா.. ‘அரண்மனை 4’ படத்தை கலாய்த்த புளூ சட்டை மாறன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4’ மற்றும் ’மகாராஜா’ ஆகிய திரைப்படங்களின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படங்களின் வசூல் தகவலை புளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் கலாய்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் எத்தனை நாட்கள் திரையரங்கில் ஓடியது என்பதை வைத்து மட்டுமே ஒரு படம் வெற்றி படமா அல்லது தோல்வி படமா என்பது முடிவு செய்யப்படும். ஆனால் சமீப காலமாக ஒரு திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்பதை வைத்து வெற்றி தோல்வி முடிவு செய்யப்படுகிறது.

குறிப்பாக சமூக வலைதள பயனாளிகள் ஒரு திரைப்படம் வெளியானவுடன் முதல் நாளில் எவ்வளவு வசூல், இரண்டாவது நாளில் எவ்வளவு வசூல், ஒரு வாரத்தில் எவ்வளவு வசூல் என்ற தகவல்களை அடிப்படை ஆதாரமில்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு பதிவு செய்து வருகின்றனர்.

பல சமயம் இந்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது என்றும் காசு வாங்கிக் கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு வசூல் தொகையை அதிகரித்து சமூக வலைத்தள பயனாளிகள் விளம்பரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.



ஒரு கட்டத்தில் தயாரிப்பு தரப்பே தங்களது படம் வெற்றி படம் என்பதை வெளியே காண்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வசூலை பல மடங்கு அதிகரித்து விளம்பரம் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான சுந்தர் சி யின் ’அரண்மனை 4’ திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் அதேபோல் ’மகாராஜா’ திரைப்படமும் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த தகவலைத்தான் புளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் கிண்டல் செய்துள்ளார். ’அரண்மனை 4’ ’மகாராஜா’ படங்கள் வசூலித்தது 100 கோடியா? கொஞ்சமாவது மனசாட்சியோடு உருட்டுங்கப்பா’ என்று பதிவு செய்துள்ளதை அடுத்து உண்மையில் இந்த இரண்டு படங்களும் 100 கோடி வசூல் செய்ததா என்ற சந்தேகம் தற்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு படத்தின் உண்மையான வசூல் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும் என்ற நிலையில் அந்த தயாரிப்பாளரே படத்தின் வசூலை மிகைப்படுத்தி கூறினால் இதற்கு முடிவே இல்லை என்பது தான் கோலிவுட் திரை உலகின் தற்போதைய நிலையாக உள்ளது.

Advertisement

Advertisement