இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள “லீடர்” திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, ஷாம், விடிவி கணேஷ், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார்.

இந்நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படம் குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அவரது கருத்துப்படி, படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் எந்த சலிப்பும் இல்லாமல் வேகமாக நகர்கிறது. எதிர்பார்த்த அளவிற்கு படம் மோசமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இரண்டாம் பாதி குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்கும் ட்விஸ்ட் சேர்க்க முயன்றாலும், அவை சுவாரஸ்யமற்றதாகவும் பல இடங்களில் மொக்கையாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், படத்தின் ஓட்டம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், லெஜண்ட் சரவணனின் நடிப்பு குறித்து பேசும்போது, அவரது முந்தைய படத்தை விட இந்த படத்தில் முன்னேற்றம் இருப்பதாக பாராட்டியுள்ளார். குறிப்பாக, தேவையற்ற ரொமான்ஸ் மற்றும் குசும்பு காட்சிகளை தவிர்த்திருப்பது நல்ல மாற்றம் என கூறியுள்ளார்.
மொத்தத்தில், நல்ல கதைக்களம் இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போனதாகவும், இரண்டாம் பாதி பலவீனமாக இருந்ததால் படம் ஒரு “ஓகே” நிலைக்கு மட்டுமே தள்ளப்பட்டுள்ளது என்றும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இந்த விமர்சனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!