• Jul 22 2025

அறிவாளிகளுக்கு மட்டுமே ‘இந்தியன் 2’ படம் பிடிக்கவில்லை.. பாபி சிம்ஹா பேட்டிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

‘இந்தியன் 2’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் பாபி சிம்ஹா சமீபத்தில் அளித்த பேட்டியில் அறிவாளிகளுக்கு மட்டும் தான் ‘இந்தியன் 2’ படம் பிடிக்கவில்லை என்றும் மற்றபடி குடும்பமாக இந்த படத்துக்கு ஆடியன்ஸ் வருகை தந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிய தொடங்கியது. முன்னணி ஊடகங்கள் முதல் யூடியூப் விமர்சகர்கள்  வரை இந்த படத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய நிலையில் இந்த படம் வசூலிலும் படுதோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் பாபி சிம்ஹா சமீபத்தில் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் ‘இந்தியன் 2’ நெகட்டிவ் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘இந்தியன் 2’ திரைப்படம் சில அறிவாளிகளுக்கு மட்டும் தான் பிடிக்கவில்லை, சில அறிவாளிகள் எது நன்றாக இருந்தாலும் அதை ஒப்புக் கொள்ளாமல், ஏதாவது ஒரு குறை கண்டுபிடிப்பார்கள், அப்படிப்பட்ட அறிவாளிகளை நாம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் ‘இந்தியன் 2’ படத்திற்கு கூட்டம் கூட்டமாக குடும்ப ஆடியன்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் ‘இந்தியன் 2’படத்திற்கு கூட்டமே இல்லாமல் காலியாக இருக்கும் நிலையில் எந்த தியேட்டரில் அவர் குடும்பமாக ஆடியன்ஸ் வருவதை பார்த்தார் என்று அவருடைய கருத்துக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement