• Dec 26 2024

தமிழ் நடிகையுடன் காதல் என்பது உண்மைதான்.. விவாகரத்தான பாலிவுட் நடிகர் பேட்டி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவர் தமிழ் நடிகை ஒருவரை காதலித்துக் கொண்டிருப்பது உண்மைதான் என சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான்கான் என்பவர் பாலிவுட் திரையுலகில் பிரபலமானவர் என்பதும் இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’அவந்திகாவை பிரிந்த பிறகு நான் ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும், வீட்டின் கதவு ஜன்னல் அனைத்தையும் மூடிவிட்டு தனிமையில் அழுதேன் என்றும், அதன் பிறகு தான் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்தேன் என்றும் தெரிவித்தார்.



அப்போதுதான் எனக்கும் தமிழ் நடிகை லேகா வாஷிங்டனுக்கு நட்பு ஏற்பட்டது என்றும், அந்த நட்பு காதலாக மாறி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நேரத்தில் நானும் லேகாவும் ஒன்றாக தங்கி இருந்தோம் என்றும், அப்போது எங்கள் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு காதல் ஆக மாறியது என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய பெண் குழந்தையை தானும் தனது முன்னாள் மனைவி அவந்திகாவும் மாறி மாறி பார்த்துக் கொள்கிறோம் என்றும், நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக பிரிந்தாலும் ஒரு பெற்றோராக குழந்தைக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து வருகிறோம் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை லேகா வாஷிங்டன் தமிழில்  'ஜெயம்கொண்டான்', 'வா குவாட்டர் கட்டிங்’, 'கல்யாண சமையல் சாதம்’ ஆகிய படங்களிலும் சில தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement