• Dec 26 2024

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு திருமணம்.. பிரபல நடிகர் தான் மாப்பிள்ளை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த நடிகைக்கு ஜூன் 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை திருமணம் செய்பவர் ஒரு பிரபல நடிகர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’லிங்கா’ என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ’தபாங்’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி, அதன் பிறகு பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக இவர் நடித்த ’ரவுடி ரத்தோர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.



சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ஹீராமண்டி’ என்ற வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இவரது திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளன. நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை  நீண்ட நாளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இரு தரப்பின் பெற்றோர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதை அடுத்து ஜூன் 23ஆம் தேதி திருமணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக ‘ஹீராமண்டி’ படக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமண கொண்டாட்டங்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து ரசிகர்கள் சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement