• Apr 27 2026

திருமணத்திற்கு முன் குழந்தை.. பச்சைக்கொடி காட்டிய சத்யராஜ்! என்ன இப்படி சொல்லிட்டாரு.!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிற்காலத்தில் நாயகனாக கலக்கியவர் சத்யராஜ். இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் பல சவால்களை கடந்துள்ளார். மேலும் இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.

சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். அதில் சிபிராஜ் சினிமாவில் தொடர்ந்து வருகிறார். சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருவதோடு திமுக கட்சியிலும் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக சார்பில் பல தொகுதிகளில் வாக்கு பிரச்சாரம் செய்தார். அதில் விஜய் பற்றியும் அவருடைய கட்சி பற்றியும் விமர்சித்து பல சிக்கல்களை சந்தித்தார்.

சமீபத்தில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சில விஷயங்களை வெளிப்படையாக கூறி சர்ச்சையில் சிக்கினார். குறிப்பாக திருமணம் மற்றும் குழந்தைகள் பற்றிய அவரது கருத்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.


அதன்படி, "திருமணம் எல்லோருக்கும் அவசியம் என்று நான் நினைக்கவில்லை. தாலி கட்டுவது, மோதிரம் மாற்றுவது என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தால் அவர்கள் இணைந்து வாழலாம். திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்வதில் எனக்கு முழு ஒப்புதல் உள்ளது. என்னுடைய தந்தை என் விருப்பம் தொடர்பில் முழு சுதந்திரம் அளித்துள்ளார்" என தெரிவித்திருந்தார். இது பல சர்ச்சைகளுக்கு காரணமானது.

இந்நிலையில் தன்னுடைய மகளின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து சத்யராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, "நான் ஒரு தீவிர பெரியாரியவாதி. ஜாதி மத சடங்குகளில் தனக்கு உடன்பாடில்லை. திருமணம் என்பது ஒரு தனிநபர் விருப்பம். இன்றுள்ள மருத்துவ வசதிகளை பயன்படுத்தி திருமணம் இன்றியும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். மகளின் முற்போக்கான கருத்துகளுக்கு நான் முழுமையாக ஆதரவு தருவேன்" என தெரிவித்துள்ளார்.

திருமணம், ஜாதி மற்றும் சடங்குகள் குறித்து திவ்யா சத்யராஜ் தெரிவித்த கருத்துகளுக்கு நடிகர் சத்யராஜ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement