• Apr 19 2025

பொம்பிளைங்க நாங்க அப்படி என்ன பாவம் பண்ணிட்டோம்.? கோபி எடுத்த திடீர் முடிவு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், ராதிகா வீட்டில் இருந்து கிளம்பும் போது இனியா அவரை கட்டிப்பிடித்து அழுகின்றார். இதன் போது உன்னுடைய அப்பாவை உன்னிடமே விட்டுச் செல்லுகிறேன் என்று ராதிகா கிளம்பிச் செல்கின்றார்.

அதன் பின்பு ராதிகாவை நினைத்து பாக்யா ரூமில் இருந்து அழுகின்றார். இதன் போது அங்கு வந்த செல்வி, தானும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இப்படி எல்லாம் ராதிகா பண்ணுவாங்க என்று சொல்ல, அவங்க தெளிவாகத்தான் முடிவு எடுத்து இருக்காங்க. பொம்பளைகளுக்கு மட்டும் ஏன் இப்படி இந்த கஷ்டம் என்று புலம்பி அழுகின்றார்.

இன்னொரு பக்கம் ராதிகா வீட்டை விட்டு போனதை நினைத்து அழுது புலம்புகின்றார் கோபி. எதற்காக இப்படி ராதிகா பண்ணினார் என்று தனியாக இருந்து யோசிக்கிறார்.


இதை தொடர்ந்து கமலா வீட்டுக்குச் சென்ற ராதிகாவிடம் என்ன நடந்தது? மாப்பிள்ளை வரலையா என்று வினாவுகின்றார் கமலா. அதற்கு என்னிடம் இப்போது எதையும் கேட்காதே என்று ராதிகா சொல்லுகின்றார். 

ஆனாலும் கமலா  மீண்டும் மீண்டும் கேட்க, நான் அவரை அவர்களுடைய வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டேன். எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று ராதிகா ரூமுக்கு செல்கின்றார்.

இறுதியில் ராதிகாவை பார்த்துவிட்டு வருவதாக ஈஸ்வரிடம் கோபி சொல்ல, அவர் தடுக்க பார்க்கின்றார். ஆனாலும் இப்படியே இருந்தால் எனது மண்டை வெடித்து விடும். ராதிகா எதற்காக என்னை விட்டு சென்றார் என அதை நான் கேட்டு விட்டு வருகின்றேன் என்று கிளம்பிச் செல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement