• Dec 26 2024

ராதிகாவுக்கு முன்னால் கோபியைத் திட்டும் பாங்கர்ஸ்- பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- செம சந்தோசத்தில் இனியா- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பழனிச்சாமியைச் சந்தித்து பேசும் ராதிகா பாக்கியாவைக் கல்யாணம் பண்ணிக்க சொல்ல, பழனிச்சாமி நாங்க அப்படிப் பழகல என்று விளக்கம் கொடுக்கின்றார். அப்போது ராதிகா கோபியை தான் கஷ்டப்பட்டு கல்யாணம் செய்தாலும் அவர் இன்னும் பாக்கியா பின்னாடியே சுத்துவதாகவும் சொல்கின்றார்.


தொடர்ந்து பாக்கியா நடத்தும் கேன்டீனுக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதால் பாக்கியா, அமிர்தாவையும் உதவிக்கு கூப்பிட்டு சாப்பாடுகளைப் பரிமாறுகின்றார்.அதைப் பார்த்த ஒருவர் பாக்கியாவின் கண்காட்சியை எப்படியாவது நிறுத்தனும், கெட்டுப் போன சாப்பாட்டு பாசல் ஒன்றைக் கொண்ட போய் காட்டி பாக்கியாவின் ஆடரைக் கான்சல் செய்யலாம் என்று முடிவு பண்ணுகின்றார்.

மறுபுறம் வீட்டில் செழியன், எழிலிடம் அம்மா கிட்ட பேசினியா கேன்டீன் விஷயம் எல்லாம் எப்பிடி போகுது என்று கேட்க எழில் அம்மா எல்லாமே நல்லா போய்ட்டு இருக்கு என்று தான் சொன்னாங்க வந்தால் தான் மற்ற விஷயங்களை எல்லாம் கேட்கலாம் என்கின்றார். அப்போது அங்கு வரும் பாக்கியா நிறைய கூட்டம் வந்த சாப்பாடு வாங்கிட்டு போன விஷயத்தைச் சொல்கின்றார்.


பின்னர் ரூமுக்குள் சென்று தனக்கு கால் வலிக்கின்றது என பாக்கியா சொல்ல, இனியா கால் பிடித்து விடுவதோடு பாக்கியா பற்றி பெருமையாகப் பேசுகின்றார்.இதனால் பாக்கியாவும் சந்தோசப்படுகின்றார். மறுபுறம் கோபி கிரடிட் காட் பணம் கட்டாததால் கோபியை அழைத்து வாசலில் வைத்து திட்டுகின்றனர்.


அந்த நேரம் பார்த்து ராதிகா வர கோபி அதிர்ச்சியடைகின்றார். பின்னர் விடிந்ததும் பாக்கியா பொருட்கண்காட்சி நடக்கும் இடத்திற்கு போக, அங்கே பாக்கியாவின் கான்டீனுக்கு சீல் வைத்து விட்டதாக சொல்ல அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement