• Apr 28 2025

பிரதர் படத்திற்கு எகிறும் மவுசு.. சரிவிலிருந்து மீளும் ஜெயம் ரவிக்கு நிரம்பிய கஜானா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தீபாவளி தினத்தை முன்னிட்டு தமிழில் வெளியான திரைப்படம் தான் பிரதர். இதனுடன் அமரன், பிளடி பெக்கர் ஆகிய திரைப்படங்களும் அதே நாளில் வெளியானது.

பிரபல இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம் தான் பிரதர். இதில் பிரியங்கா மோகன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், நட்டி, பூமிகா, சீதா, வி  டிவி கணேஷ், பிரபல தெலுங்கு நடிகரான ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் இருந்து விலகிய நடிகை..? உண்மையை போட்டுடைத்த ராஜி

இந்த நிலையில், பிரதர் படம் வெளியாகி மூன்று நாட்களை கடந்த நிலையில் அதன் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. தீபாவளி தினத்தில் வெளியான படங்களில் பிரதர் படம் தான் வசூலில் அடிவாங்கிய படமாக காணப்பட்டது.


அதன்படி, முதல் நாளில் மூன்று கோடி ரூபாய் வசூல் செய்த பிரதர், இரண்டாவது நாளில் சற்று சரிந்தது. இரண்டாவது நாளில் 2.5 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். 

தற்போது மூன்றாவது நாளில் மீண்டும் 3 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. மொத்தத்தில் பிரதர் திரைப்படம் சுமார் 10 கோடி வரை வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement