• Apr 19 2026

2026ல் இந்தியா வருகிறதா BTS இசைக்குழு.? ரசிகர்களை குஷிப்படுத்திய அப்டேட்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிரபல தென்கொரிய இசைக்குழுவான BTS, முதன்முறையாக இந்தியாவிற்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.


 குறிப்பாக, 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அவர்களின் பிரம்மாண்ட உலகளாவிய இசைப் பயணத்தின் (World Tour) ஒரு பகுதி இந்தியாவிலும் இடம்பெறலாம் என்ற தகவல், இந்திய BTS ARMY ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, 2026ம் ஆண்டின் முற்பகுதியில் மும்பையில் ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை நடத்த BTS குழுவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது இன்னும் ஆரம்ப கட்ட திட்டமிடல் நிலையில் இருந்தாலும், இந்த செய்தி இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்தியாவில் இதுவரை BTS நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தாத நிலையில், மும்பை போன்ற சர்வதேச அளவிலான நகரம் தேர்வு செய்யப்படுவது, இந்த தகவல்களுக்கு மேலும் வலுசேர்க்கிறது. 

இந்த தகவல்களுக்கு முக்கியமான பின்னணியாக பார்க்கப்படுவது, BTS-ன் மேலாண்மை நிறுவனமான HYBE, கடந்த செப்டம்பர் 2025-ல் மும்பையில் ‘HYBE India’ என்ற தனது அலுவலகத்தைத் தொடங்கியது என்பது தான்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் BTS ரசிகர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளங்கள், யூடியூப் போன்ற தளங்களில் BTS பாடல்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தியாவுக்கு BTS குழுவினர் வருகை தருவது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. 

Advertisement

Advertisement